Powered By Blogger

Thursday, September 2, 2010

வீதியில் விதியின் விளையாட்டு

வீதியில் விதியின் விளையாட்டு!
(02.09.2010)


நடைபாதையில் நடந்து செல்கையில் மனம் 'திக்''திக்'கென்றது!
படையெடுத்து வருமோ டாஸ்மாக் ராணுவம் என்று...


நெடுஞ்சாலை ஸ்கூட்டர் பயணத்தில் கண்கள் அலைபாய்ந்தன!
தடுப்புக்கம்பிகளை உடைத்து வருமோ மணல் லாரி என்று...


வாகனத்தில் கண்டம் என்று பாட்டி சொன்னாள் - அந்த
வாகனம் என்னுடையதா அடுத்தவனுடையதா யாருக்குத் தெரியும்?
ஏக காலத்தில் சனி,எமன் கரிசனம்!
ஆக நிச்சயம் எருமை வாகன தரிசனம்!


பறவைகளுக்கு விண்ணில் நெரிசல்கள் இல்லை!
எறும்புகளுக்குத் தம் பாதையில் குழப்பங்கள் இல்லை!
மனிதனுக்கு மட்டும் ஆயிரமாயிரம் மயக்கங்கள் கண்டேன்!
தன் உயிர்க்கும் பிறர் உயிர்க்கும் மதிப்பில்லாததால் நொந்தேன்!


பயிர் முளைக்குமுன் கருகுவது சிறிதா?
உயிரை விடவும் உல்லாசம் பெரிதா?


நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமைல்லை - தேவமொழி மட்டுமல்ல
தன் குடும்பத்திற்க்கு ஒவ்வொருவரின் உறுதிமொழி!


வாழ்க்கை என்பது நாம் ரசிப்பதற்க்கே - அது
வேட்கை கொண்டு நம்மை ருசிப்பதற்கு அல்ல!


வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!
வி(வீ)தியின் வசம் வீழ்வதற்கு அல்ல!