Powered By Blogger

Tuesday, August 31, 2010

மதவெறி

மதவெறி
(2001)


சாதி இரண்டொழிய வேறில்லை - சில இடங்களில்
நாதி இல்லை தன் சாதி தெரியாதவர்க்கு!

வழிபாட்டுத் தலங்களில் எல்லாம்
பழிதீர்க்கும் படலங்கள்!
மதவெறி பிடித்து பிறரை
வதைப்பவர்களுக்கு பெயரோ பக்தர்கள்!

பக்தி என்பது கடவுள் மீதுள்ள
பற்று தான் - ஆனால்
பக்'தீ' என்ற பெயரால் அனைவரும்
பற்றி எரிகின்றனரே!

சந்ததி சந்ததியாகப் பரவுகிறது சாதியின் வேர்,
அந்தோ! அதனால்தானே உலகினில் போர்!

No comments:

Post a Comment