Powered By Blogger

Tuesday, August 31, 2010

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்
(2005)

பௌர்ணமியில் முழுமை அடைந்து
தேய்பிறையாய் மறைந்து, வளர்பிறையாய் வளர்ந்து
மீண்டும் ஒளிறும் வெண்ணிலவைப் போல்
ஓராண்டில் எத்தனை எத்தனை இன்னல்கள்
நேரினும் மீண்டும் மகிழ்வாய்
மலர்ந்தது புத்தாண்டு - உடன்
வளர்ந்தது உறுதிமொழிகளின் பட்டியல்!

பிழைகளைக் குறைப்பதே மானுடம்
தழைத்து வளர வழியாகும்,
அதைச் செய்ய
புத்தாண்டு வரை காத்திருப்பதெதற்கு?

தேவமைந்தன் இம்மண்ணில் பிறந்தது
மனிதகுல விடுதலைக்கே! - ஆனால்
பாவமைந்தனாம் மானிடன் அவரையும்
சிலுவையில் அறைந்து பாவமிழைத்தானே!

சமுதாயம் என்ற ஆலமரத்திலிருந்து
தளிர்விடும் நச்சுக்கொடிகளைக் களைய
இளைஞனே சபதமெடு!

உன் மனத்திலுள்ள
வேகமும் வன்முறையுமே தீப்பந்தம்!
விவேகமே தீக்குச்சி!
பற்றி எரியும் தீப்பந்தத்தைக் காட்டிலும்
கணத்தில் அணையும் தீக்குச்சியே மேல்
ஏனெனில் தீப்பந்தத்தால் எவரும் விளக்கேற்றுவதில்லை!


No comments:

Post a Comment